பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாகக் கருத்து ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் அன்புமணிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அவருடைய முகவரிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. இதனையடுத்து இந்த கடிதத்தை ரத்து செய்து தன்னுடைய முகவரிக்கு அந்த கடிதத்தை அனுப்ப உத்தரவிடக் கோரி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் கட்சித் தலைவர் என்ற அவருடைய பதவிக் காலம் முடிந்துவிட்டது. கட்சியின் தலைவராக நீடிப்பதாகத் தேர்தல் ஆணையத்திற்குப் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். கட்சியின் நிறுவனர் என்ற முறையில் என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் சட்ட விரோதமாகக் கட்சி கூட்டங்கள் நடத்த அன்புமணி உரிமை கோர முடியாது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கக் கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எனக்குத்தான் அந்த கடிதம் அனுப்பி இருக்க வேண்டும்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவும் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரைக்கும் மாம்பழ சின்னத்தை முடக்கவில்லை” என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (02.02.2026) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/ramadoss-hc-2026-02-02-07-22-53.jpg)