பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இந்நிலையில் அண்மையில் அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே நேரம் தங்கள் தரப்பு தான் உண்மையான பாமக என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அன்புமணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தர்மபுரியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், பாமக செயல் தலைவராகத் தனது மகள் ஸ்ரீ காந்தி என்கிற காந்திமதியை நியமிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “என்னுடைய பெரிய மகள் ஸ்ரீகாந்தியை அழைத்துக்கொள்கிறேன். அவர் கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். எனவே அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்து சொல்லுவோம்” எனப் பேசினார்.
முன்னதாக அவரது மகன் அன்புமணியை ஏற்கனவே கட்சியின் தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கிய நிலையில் பாமக செயல் தலைவராக அவரது மூத்த மகள் காந்திமதியைச் செயல் தலைவராக நியமித்து ராமதாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us