பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனால், கட்சியில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சகட்டத்தை எட்டி வருகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், சேலத்தில் டிசம்பர் 29ஆம் தேதி நடக்கும் பா.ம.க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என ராமதாஸ் தரப்பினர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். பா.ம.கவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவாக ஒவ்வொரு ஆண்டும் பா.ம.க சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி நடத்துவார்கள். கடந்த ஆண்டு இதே போன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது.

Advertisment

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆன நிலையில், இந்த ஆண்டும் வருகிற 29ஆம் தேதி சேலத்தில் பொதுக்குழு நடைபெறும் என ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு பா.ம.கவின் பொதுக்குழு அல்ல என்றும், அதில் எடுக்கப்படும் முடிவுகள் பா.ம.கவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தெரிவித்தார்.

இந்த நிலையில், அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சேலத்தில் வருகிற 29ஆம் தேதி நடைபெறும் பா.ம.க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பினர் மனு அளித்துள்ளனர். 

Advertisment