மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞராக ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம் சங்கர் ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையத்தைச் சேர்ந்த தில்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராமசங்கர் ராஜா அவர்கள் ஏற்கனவே மூன்று ஆண்டுகள் மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞராக 2022 ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் நவம்பர் 2025 வரை இருந்தது. தற்போது அவருக்கு பதவி உயர்வு தந்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு நியமித்து உள்ளது.

Advertisment

ராம் சங்கர் ராஜா ஏற்கனவே மத்திய அரசின் கெயில் நிறுவனம், அகில இந்திய பார் கவுன்சில், தமிழ் நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கழகம், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், ஆதி திராவிடர் நல துறை, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி என பல்வேறு அரசு மற்றும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். 2012 ஆண்டு சட்ட படிப்பை முடித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்ய துவங்கி 2015 குற்றவியல் துறையில் சட்ட மேல் படிப்பையும் 2020ல் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். 

Advertisment

சட்ட படிப்பில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து ஆராட்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். தற்போது உள்ள நீதிபதிகள் நியமன நடை முறையை கடுமையாக எதிர்த்து தனது அறிக்கையை தாக்கல் செய்தார். கங்கை கரையில் உள்ள குப்பைகளை அகற்ற கோரியும், நீதிபதிகள் நியமனம் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்றும் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்து நல்ல உத்தரவுகளை பெற்றார். இன்று உச்ச நீதி மன்றதின் வலைதலத்தில் நீதிபதிகள் நியமனம் மற்றும் மாறுதல் சமந்தப்பட்ட  கொலிஜியம் அமைப்பின் செய்யலாடுகளை மக்கள் அறிய  காரணமாக இருந்தவர் ராம் சங்கர் ராஜா.

sc-1

இவர் வழக்கு தொடுத்தப் பின்னரே நீதிபதிகள் நியமனம் மற்றும் மாறுதல் சமந்தப்பட்ட  கொலிஜியம் அமைப்பின் செய்யலாடுகளை மக்கள் அறிய உச்சநீதிமன்றதின் வலைதளத்தில் கொண்டு வரபட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகளை நடத்தி வருகிறார். அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்ற கூடாது போன்ற உத்தரவுகளையும் பெற்று தந்தவர். ஐநா மனித உரிமைகள் ஆணையம் இங்கிலாந்து பாராளுமன்றம் அமெரிக்காவில் நடைபெற்ற ஈழத் தமிழர்களுக்கான அரசியலமைப்பு சாசன விரைவு மாநாடு போன்ற பல்வேறு உலகளாவிய கருத்தரங்குகளில் பங்கேற்று தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டவர். 

Advertisment

தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும் டெல்லி தமிழ் சங்கம் தில்லி கம்பன் கழகம் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளில் தொடர்பு உடையவர் தமிழர்களுக்காகவும் தமிழர்களின் நலம் காக்கும் பல்வேறு நாடுகள் பயணம் சென்று தமிழை வளர்க்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞராக ராம் சங்கர் ராஜா இருப்பது தங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்கிறார்கள் ராஜபாளையம் மக்கள்.