உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, அதிகாலையில் எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணக்கோலமிட்டு பொங்கலிட்டு சூர்ய பகவானை வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்தனர். இதையறிந்த ரஜினிகாந்த், மகிழ்ச்சியோடு வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து கையசைத்தார். இதனை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரஜினிக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதன் பின்னர், ரசிகர்கள் முன்பு கையெடுத்து கும்பிட்டு 2026 புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரஜினிகாந்த், “அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் நல்லா இருக்கணும். முக்கியமாக இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கணும். அவர்கள் சந்தோஷமாக இருந்தால் தான் எல்லோரும் சந்தோஷமாக இருக்க முடியும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/15/rajinipongal-2026-01-15-10-37-02.jpg)