Rajinikanth votes in the Producers' Guild elections
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் இன்று (22-02-26) நடைபெற்றது.
இத்தேர்தலில், ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் எஸ்.கமலக்கண்ணனும், செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கமீலா நாசரும், பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸும், இணைச்செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமாரும் போட்டியிட்டனர்.
மூத்த தயாரிப்பாளர்களான அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, .எம்.கபார், ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து சாலை சகாதேவன், பைஜா டாம், எஸ்.ஜோதி, வி.பழனிவேல், கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ.முருகன், ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், கே.முருகன், வி.ஞானவேல், பிரவின்காந்த், வி.என்.ரஞ்சித் குமார், எஸ்.ஜெயசீலன், ராஜா என்கிற பக்ருதீன் அலி அகமத், .எம்.தனசண்முகமணி, பி.ஜி.பாலாஜி, இசக்கிராஜா, .பி.மகேந்திரன், எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், ஏ.ஏழுமலை, எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து வாக்களித்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் நிறைய பிரச்சனை இருக்கிறது. யார் இந்த தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்களோ அவர்கள் முக்கியமான பிரச்சனைகளை எல்லாம் சரி செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிரச்சனையை தீர்க்க வேண்டும்” என்று கூறினார்.
Follow Us