Advertisment

புத்தாண்டு தினம்; ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

புதுப்பிக்கப்பட்டது
rajininew

Rajinikanth met and greeted fans on New Year's Day 2026

உலகம் முழுவதும் இன்று (01-01-26) புத்தாண்டு தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை உலகின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தையொட்டி, பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதோடு கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்து வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தனர். இதையறிந்த ரஜினிகாந்த், மகிழ்ச்சியோடு வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து கையசைத்தார். இதனை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதன் பின்னர், ரசிகர்கள் முன்பு கையெடுத்து கும்பிட்டு 2026 புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

Advertisment
Actor Rajinikanth new year New Year 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe