பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் (05-10-25) இரவு திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, அவருக்கு நேற்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ராமதாஸை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசி மூலம் ராமதாஸை நலம் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் ராமதாஸை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/07/ramarajini-2025-10-07-10-23-48.jpg)