ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் அதிமுக  பூத் கமிட்டி  நிர்வாகிகள் பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான   ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார்.  

Advertisment

“ஜெயலலிதா இருந்தபோது எதிரிகளே இல்லை என்று கூறினார். ஆனால்  எடப்பாடி பழனிச்சாமிக்கு  ஏற்பட்ட துன்பங்கள் துயரங்கள் எத்தனை?  ஒரு  சாமானியன்,  ஒரு  விவசாயி தமிழகத்தை ஆள்வதா?  அதிமுக வுக்கு   பொதுச்செயலாளராக இருப்பதா?  வழக்குக்கு மேல் வழக்கு போட்டார்கள்.  நீதிமன்றம் சென்றார்கள் .  தேர்தல் ஆணையத்திடம் சென்றார்கள் . ஆனால்,    எம்.ஜி.ஆரின்  ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும், மக்களின் அன்பும்  இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆகலாம் என்று தீர்ப்பு  வந்தது.

Advertisment

எடப்பாடி பழனிச்சாமியை இன்னும் விட்டபாடில்லை. அவரை ஒடுக்கிவிட வேண்டும், விரட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். இதையெல்லாம் தகர்த்து மக்களை காப்பேன், தமிழகத்தை மீட்பேன்  என்று  வெற்றி பயணம் மேற்கொண்டு வருகிறார். பல களங்களைக்  கண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. நியாயம், நேர்மை, தர்மம் அவர்  பக்கம் இருக்கிறது.   இறைவன் அவர் பக்கம்  இருக்கிறான். அவர் வெற்றி பெறுவார்.

பல சூழ்ச்சிகள், பல பிரச்சினைகள், கூட இருந்துகொண்டே குழி பறிப்பது,  வெளியில் இருந்து குழி பறிப்பது என அத்தனையையும் தகர்த்து எறிந்து அதிமுகவினுடைய அலங்கார தேவதையாக இருக்கிறார். எடப்பாடி  பழனிச்சாமியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  அதிமுகவின் ஒன்றரை  கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அம்மாவின் தளபதியாகவும்,எம்ஜிஆரின் தொண்டராவும், சிலுவம்பாளையத்தில்  கிளைக் கழகச் செயலாளராகவும்  இயக்கத்தில் பணியாற்றி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார். ஏழைகளின் கஷ்டங்களையும், இல்லாதவர்களின் துன்பங்களையும் உணர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஒன்றும்  சூப்பர் ஸ்டார் கிடையாது , சுப்ரீம் ஸ்டார் கிடையாது.  ஆனால்,   அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

Advertisment

எடப்பாடி பழனிச்சாமி விவசாயியாக பிறந்தவர், கண்மாய்க் கரையில் விளையாடியவர். கண்மாய் தண்ணீரைக் குடித்தவர், குளித்தவர். இப்படி இருந்தவர், மக்கள் செல்வாக்கினைப் பற்றிக்கொண்டு  உயர்ந்திருக்கிறார்  என்று சொன்னால், அது  அவரது நேர்மை. தனக்குக் கிடைத்த முதலமைச்சர்  வாய்ப்பை பயன்படுத்தி 8 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதைச் செய்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில்  எத்தனையோ நல்ல  திட்டங்களைக் கொண்டு வந்தார்.  7.5  சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கி  ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை  நனவாக்கினார். எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் ஆற்றல்,  அறிவு  இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரிடமும் இல்லை. மு.க. ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால்,  எடப்பாடி  பழனிச்சாமியை  கோட்டைக்கு அனுப்ப வேண்டும்.” என்றார்.