சிவகாசி பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கின்றனர். திமுக ஆட்சியில் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். என்னை மிரட்டி பணியவைக்க திமுக நினைத்தது. சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். சில பேர் சொல்வார்கள் அந்த தொகுதியில் நிற்பேன் இந்த தொகுதியில் நிற்பேன் என்பாரகள். சிவகாசி தொகுதியில் தான் நான் நிற்பேன்” என்று கண்ணீர் விட்டபடியே பேசினார்.