சிவகாசி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட விஸ்வநத்தத்தில் தன் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்தி ரபாலாஜி பேசினார். அப்போது அவர், “என்னை நம்பி வரும் யாரையும் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். என்னுடைய வளர்ச்சிக்காக உழைக்கும் உங்களது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முன்னேற வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காக எப்போதும் உங்களுடன் இருப்பேன். பட்டாசுத் தொழில் சிக்கலில் சிக்கிய காலங்களில் தொழிலாளர்களுக்கு துணையாக நின்றவன் நான். அந்தத் தொழிலைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பேச வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தினேன்.
அதன் தொடர்ச்சியாக எம்பி இன்பதுரை நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எடுத்துரைத்தார். தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற எம்பிக்கள் பட்டாசுத் தொழிலுக்காக குரல் கொடுக்காதது வருத்தம் தருகிறது. சிலருக்கு மக்கள் நலனைக் காட்டிலும் ஓட்டே முக்கியம். நான் பதவியில் இருந்தபோதும் அகம்பாவம் கொள்ளவில்லை. யாரும் எளிதில் சந்தித்து தங்கள் பிரச்சனைகளை சொல்லும் வகையில் எப்போதும் மக்கள் மத்தியில் இருந்தேன். விருதுநகர் மாவட்ட மக்களின் குறைகளை தீர்ப்பது என் கடமை என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறேன்.
சமூக வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். இறை நம்பிக்கையுடன் அரசியல் பயணம் மேற்கொள்கிறேன். என் எண்ணங்கள் தூய்மையானவை, என் இலக்கு உயர்ந்தது. உங்களுக்காக உழைப்பதும், உங்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதும் என் உறுதி.” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/10/rajendrabal-2026-02-10-16-16-26.jpg)