ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், ஜெய்சால்மர் - ஜோத்பூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடிரென  தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள்,  4 பெண்கள் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  

Advertisment

இந்த விபத்து தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயர விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அனைத்து உதவிகளையும் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Advertisment

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு துணை நிற்கிறது, மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க உறுதி பூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஜெய்சால்மரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கைலாஷ் டான் கூறுகையில், “ஓடும் பேருந்தில் தீப்பிடித்து எரிந்தது. உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறு கிறது” என்று தெரிவித்துள்ளார்.