வங்கிக்கு கருப்பு மை; வங்கி ஊழியரை அறைந்து தாக்குதல் நடத்திய ராஜ் தாக்கரே கட்சியினர்!

nava

Raj Thackeray's party members slapped and thrash a bank employee in nagpur

மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, மராத்தி பேசாதவர்கள் மீது நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குவது, அடிப்பது போன்ற பல வழக்குகள் பதிவாகி வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு, விபத்து கோரிக்கையைத் தீர்ப்பதற்காக மராத்தியில் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை இந்தியில் மொழி பெயர்த்து தருமாறு நாக்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கி கோரியதற்காக நூற்றுக்கணக்கான நவநிர்மாண் சேனா கட்சியினர் வங்கிக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நவநிர்மாண் சேனா கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், வங்கியில் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி கடன் வாங்கிய ஒருவர், ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சியினரை ஆதரவை நாடியதைத் தொடர்ந்து அக்கட்சியினர் நாக்பூரில் உள்ள வங்கியில் தகராறில் ஈடுப்பட்டனர். இந்திரஜித் பலிராம் முலே என்ற நபர், மண் அள்ளும் இயந்திரத்தை வாங்குவதற்காக நாக்பூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய சில மாதங்களிலேயே கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு அவர் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்கு தீர்வு காண பலமுறை வங்கியை அணுகியும் உள்ளார். ஆனால், வங்கி எந்தவித உதவியையோம், தீர்வு காண்பதற்கு வாய்ப்பையோ வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து,  அவர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக அவர் கனரக இயந்திரத்தை எடுத்தபோது, வங்கி வாகனத்தைக் கைப்பற்றி அவருக்குத் தெரிவிக்காமல் விற்றதாகக் கூறப்படுகிறது.

வங்கியின் நடவடிக்கையால் கோபமடைந்த முலே, நவநிர்மாண் சேனா கட்சியினரிடம் உதவியை நாடியுள்ளார். அதன் பின்னர், நவநிர்மாண் சேனா கட்சியினர் சில பேர் வங்கி கிளைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒருகட்டத்தில் வலுவடைந்தது. அதன் பின்னர் அவர்கள், வங்கிச் சுவற்றில் ‘ஊழல்’ மற்றும் ‘மகாராஷ்டிரா எதிர்ப்பு’ உள்ளிட்ட வாசகங்களை பெயிண்டால் எழுதி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது நவநிர்மாண் சேனா தொண்டர்களில் ஒருவர், வங்கி ஊழியரை அறைந்து மற்ற ஊழியர்களை மிரட்டினார். அதன் பின்னர், வங்கி பலகையிலும் கருப்பு மை தெளிக்கப்பட்டது. இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நவநிர்மாண் சேனா கட்சியினரை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவ் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் வங்கி ஊழியர்களின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்து விற்பனை செய்வதில் வங்கி உரிய நடைமுறைகளைப் பின்பற்றியதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

bank Maharashtra Raj Thackeray
இதையும் படியுங்கள்
Subscribe