Advertisment

“தமிழக மக்களின் மொழியை அவமதிப்பை ஏற்க முடியாது” - ராஜ் தாக்கரே எச்சரிக்கை

rajthackarey

Raj Thackeray warns RSS chief

சமீபத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மொழிக்காகப் போராடும் மனநிலை என்பது ஒரு நோய் என்று கூறியிருந்தார். இதற்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், இந்த கருத்திற்கு நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்ரே பதிலடிகொடுத்துள்ளார் . மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே தனது எக்ஸ் பதிவில், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒருவர் மொழிக்காகப் போராடினால் அதை நோய் என்று கூறுகிறார். நாங்கள் எங்களின் மொழி மற்றும் மக்களை நேசிக்கின்றோம். நாங்கள் எங்கள் மக்கள் மீதும் மொழி மீதும் செலுத்தும் அன்பு உங்களுக்கு நோய் போன்று தெரிகிறதா? அப்படியானால், இந்த நாட்டில் நான்கைந்து மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் தான், மொழியை நேசிக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம் போன்ற இந்திய மாநிலங்களில் இது முக்கியமான ஒன்றாக உள்ளது. அவர்கள் பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை நேசிக்கிறார்கள். அதே போல் மஹாராஷ்டிராவிலும், நாங்கள் எங்கள் மொழியையும் மக்களையும் நேசிக்கின்றோம்.

Advertisment

ஐந்து மாநிலங்களில் உள்ள சில கூட்டம் மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அவமதிப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சிலர், அந்த மாநில மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது தாக்குதலை ஏற்படுத்தி மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி, தங்களின் வாக்கு வங்கிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்த சம்பவங்களை எல்லாம் மோகன் பகவத் நோய் என்று அழைப்பாரா? உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குஜராத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட போது, மோகன் பகவத் இது போன்ற கருத்துக்களையும் சொல்லவில்லையே. மராத்திய மக்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பதால், அவர் இவ்வாறு பேசி வருகிறார்.  

மொழி மற்றும் கலாச்சாரங்கள் இந்த நாட்டில் இருக்கும். அதே போல் மகாராஷ்டிராவிலும் இருக்கும். அது எங்கள் உரிமை. இதன் மீது தாக்குதல் நிகழும் போதெல்லாம், மகாராஷ்டிரா முழு கோபத்துடன் எழும். முதலில், நாடு முழுவதும் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசாங்கத்தைக் கண்டித்து விட்டு, பின்னர் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுங்கள் மோகன்பகவத்”
என்று தெரிவித்திருந்தார்.

Mohan Bhagwat Raj Thackeray
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe