சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதாவது டி.ஜி.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

Advertisment

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. அதே சமயம் நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது வீட்டிற்கு நேரில் சென்ற வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு இது தொடர்பாகத் தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த மிரட்டலும் புரளி எனத் தெரிய வந்ததாகக் காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து இது போன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கக்கூடிய நிலையில், இது போன்று போலியாக மிரட்டல் விடுப்பவர்களை போலீசார் கைது செய்யப்படாத நிலையில் மீண்டும் மீண்டும் இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.