வங்கக்கடலில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை குறித்த நீண்ட வானிலை ஆய்வுக் கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், 'வட தமிழ்நாடு மற்றும் அதனை ஓட்டி இருக்கக்கூடிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் கட்டத்தில் வடதமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கும்.
தென்மேற்கு பருவ மழையின் முதல்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஜூன், ஜூலையில் இயல்பை விட 12 சதவிகிதம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இயல்பான மழை அளவு 119 மில்லி மீட்டர் என்ற நிலையில் பதிவான மழை அளவு 104 மில்லி மீட்டர் ஆக இருக்கிறது. தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பகுதி ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தொடங்கி தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பொழிய வாய்ப்பு இருக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.