தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாமன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரத்தில் நேற்று (25.11.2025) தொடங்கிய மழையானது இன்று வரை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இதன் காரணமா தாழ்வான பகுதிகள் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், ராமேஸ்வரம் தீவு முழுவதும் தொடர்ச்சியாகக் கனமழை பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தொடர் கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (26.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.
Follow Us