weather Photograph: (rain)
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய கூடும் என்பதால் நாளை தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு பெற உள்ளது. இதனால் நாளை முதல் 24 ஆம் தேதி வரை தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து இலங்கையை நோக்கி நகர்வதால் இலங்கையில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆபத்தை உணராமல் பலரும் டிராக்டர் மூலம் ஆற்றைக் கடந்து வருகின்றனர். டிட்வா புயலுக்கு பிறகு மீண்டும் இலங்கையில் சில பகுதிகளில் கனமழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us