Rain alert for 24 districts Photograph: (rain)
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழைபொழித்து வரும் நிலையில் இன்று 24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, தேனி, கோவை, சேலம், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 24 மாவட்டங்களில் 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மின்னலில் 6.6 சென்டிமீட்டர் மழையும், ராணிப்பேட்டை அம்மூரில் தல 6.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.