தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

வெளியான அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும். கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 2000 கனஅடியில் இருந்து பத்தாயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.