காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர், கோவை, நீலகிரி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மிதமான மழை வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.