Rain alert for 12 districts Photograph: (rainfall)
இன்று தமிழகத்தில் பன்னிரண்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவித்துள்ளது. அதேபோல செப்டம்பர் 9 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.10 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.