ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கேட்டுப்புதூர் ரயில்வே நுழைவு பாலத்தில் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து ரயில்கள் இயங்கும் வகையில் சரி செய்யப்பட்ட பணியினை வீட்டுவசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Advertisment

மொடக்குறிச்சி சாவடிப்பாளையம் இரயில்வே நுழைவு பாலம் இருப்புபாதை பக்கவாட்டில் உள்ள 10 டன் எடையுள்ள கான்கிரீட்பாலத்தில் நேற்று சேதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்பொழுது நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் இரயில்வே துறையினர் மூலம் இரயில்கள் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இரயில்கள் இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியினை வீட்டுவசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வுமேற் கொண்டு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் இரயில்வேத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

Advertisment

இந்த ஆய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ரயில்வே கூடுதல் முதன்மை மண்டல பொறியாளர் சரவணன், ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, வருவாய்க் கோட்டாட்சியர் சிந்துஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.