Advertisment

போராடிய பா.ஜ.கவினர்; மிட்டாய் கொடுத்து ஆச்சரியப்படுத்திய ராகுல் காந்தி!

rahulchoco

Rahul Gandhi surprised them by giving them sweets at BJP members who fought

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். அந்த வகையில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு எதிராக பீகாரின் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகிறார்.

Advertisment

இந்த பேரணியின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஆகியோரை விமர்சிக்கும் வகையில் அவதூறு கோஷங்களை காங்கிரஸ் தொண்டர்கள் எழுப்பியிருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தின் போது தலைவர்கள் யாரும் மேடையில் இல்லை. இருப்பினும், இச்செயலுக்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.கவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பீகாரின் அர்ரா பகுதியில் ராகுல் காந்தி பேரணி நடத்தினார். அப்போது பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் முன்வைத்த சர்ச்சைக் கருத்துக்கு தெரிவித்து பா.ஜ.க இளைஞர் அணியினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடிகள் காட்டி ராகுல் காந்திக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் பேரணியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே எதிர்பாராத வகையில், ராகுல் காந்தி தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி போராட்டம் நடத்தியவர்களை அழைத்துப் பேசினார். வாகனத்தில் இருந்தவாறே அவர்களின் எதிர்ப்பை கேட்டறிந்த ராகுல் காந்தி, ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு என்று கூறினார். அதன் பின்னர், ராகுல் காந்தி தனது கையில் இருந்த மிட்டாயை போராட்டக்காரர்களுக்கு வழங்கினார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, 

b.j.p Bihar Rahul gandhi Vote adhikar yatra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe