Advertisment

ராகுல் காந்தி எம்.பி. - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இடையே மக்களவையில் காரசார வாதம்!

rajnath-rahul-loksabha

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒருபகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று (01.02.2026) காலை 11 மணியளவில்  தாக்கல் செய்து உரையாற்றினார். 

Advertisment

இந்நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (02.02.2026) உரையாற்றினார். அப்போது அவர்  சீனா தொடர்பான விவகாரம் குறித்த பத்திரிகை செய்தியின் மேற்கோள்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.  அதில் “இந்தியாவின் பெரும் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது” எனத் தெரித்தார். அதற்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “ஒரு பத்திரிகை செய்தியின் மேற்கோள்களை ராகுல் காந்தி மேற்கோள் காட்டுகிறார். 

Advertisment

இது அவையின் விதிகளுக்கு எதிரானது” எனத் தெரிவித்தார். அதற்கு ராகுல் காந்தி, “ஆதாரப்பூர்வமற்ற விசயம் எதையும் நான் சொல்லவில்லை.புத்தகத்தில் எதுவும் இல்லை என்றால் அரசு பயப்படுவது ஏன்?. அவர்களை பயமுறுத்துவதற்கு இதில் என்ன இருக்கிறது?. அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட வேண்டும். எனது ஆதாரம் உண்மையானது. முன்னாள் ராணுவ ஜெனரலின் (எம்.எம். நரவனே) வெளியிடப்படாத நினைவுக் குறிப்பில் இந்த மேற்கோள்கள் உள்ளன” எனத் தெரிவித்தார். இதனையடுத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், “ராகுல் காந்தி  மேற்கோள்காட்டும் புத்தகத்தை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அவர் குறிப்பிடும் புத்தகம் வெளியிடப்படவில்லை” எனத் தெரிவித்தார். 

rajnatha-lok-sabha

இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, “பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர்  நமது தேசியவாதம் குறித்து கேள்விகளை எழுப்புகிறார்கள். இந்தக் கட்டுரை பிரதமரின் குணாதிசயங்களைப் பற்றி எழுதுகிறது. இது சீனாவைப் பற்றியதோ அல்லது பிரதமரைப் பற்றியதோ அல்ல” எனத் தெரிவித்தார். அதோடு அடுத்ததாக அகிலேஷ் யாதவை பேச அழைத்தார். இதனால் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதால் அவையில் கூச்சம் குழப்பம் நிலவியதால் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவையை மதியம் 3 மணி வரை ஒத்திவைத்தார். 

budget session china encroachments lok sabha Rahul gandhi Rajnath singh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe