நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய நூலைக் குறிப்பிட்டுப் பேச விரும்பினார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. அதே சமயம் பா.ஜ.க. உறுப்பினர் நிஷிகாந்த் துபே பல்வேறு நூல்களை மேற்கொள் காட்டி அவையில் பேசினார். அதற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.
இத்தகைய சூழலில் தான் முன்னாள் ராணுவ ஜெனரல் எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத புத்தகம் சட்டவிரோதமாகப் (பகிரப்படுவது) விநியோகிக்கப்பட்டது குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “நரவணேவின் ட்வீட் ஒன்றில் 'எனது புத்தகத்திற்கான லிங்க்கை (link) பின்தொடருங்கள்' என்று உள்ளது. நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒன்று மிஸ்டர் நரவணே பொய் சொல்கிறார். அல்லது பெங்குயின் (Penguin) நிறுவனம் பொய் சொல்கிறது. முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை.
புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று பெங்குயின் கூறுகிறது. ஆனால் அமேசானில் (Amazon) அந்தப் புத்தகம் கிடைக்கிறது. 2023இல் ஜெனரல் நரவணே, 'எனது புத்தகத்தை வாங்குங்கள்' என்று ட்வீட் செய்துள்ளார். பெங்குயின் நிறுவனத்தை விட நான் நரவணேவை நம்புகிறேன். நீங்கள் நரவணேவை விட பெங்குயின் நிறுவனத்தை நம்புகிறீர்களா?. நரவணே தனது புத்தகத்தில் சில கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை இந்திய அரசுக்கும், இந்தியப் பிரதமருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துபவை என்று நான் நம்புகிறேன். பெங்குயின் நிறுவனமா அல்லது முன்னாள் ராணுவத் தளபதியா, யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்?” எனத் தெரிவித்தார்
இந்நிலையில்
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/10/kiren-rijuju-2026-02-10-13-12-41.jpg)
மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க கோரி எதிர்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் காங்கிரஸ் கட்சியிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தோம். காங்கிரஸ் கட்சி விவாதத்தைத் தொடங்க விரும்பவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் அவையின் மையப்பகுதிக்கு (Well of the House) வந்து அமளியில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நாடாளுமன்றத்தின் மாண்பைச் சீர்குலைத்துவிட்டது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/10/raghul-ani-pm-2026-02-10-13-09-36.jpg)