டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று (14.12.2025) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.  அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கூற்றைக் கேளுங்கள். உலகம் உண்மையைப் பார்ப்பதில்லை. அதிகாரத்தைப் பார்க்கிறது. அதிகாரம் உள்ளவர் மதிக்கப்படுகிறார் என்கிறார். இது மோகன் பகவத்தின் சிந்தனை. இந்த சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ்.க்கு சொந்தமானது. 

Advertisment

நமது (காங்கிரஸ்) சித்தாந்தம், இந்தியாவின் சித்தாந்தம். இந்து மதத்தின் சித்தாந்தம், உலகின் ஒவ்வொரு மதத்தின் சித்தாந்தமும் உண்மைதான், மிக முக்கியமான விஷயம் என்று கூறுகிறது. ஆனால் உண்மை அர்த்தமற்றது. அதிகாரம் முக்கியம் என்கிறார் மோகன் பகவத். இந்த மேடையிலிருந்தே நான் உங்களுக்கு (மக்களுக்கு) உறுதியளிக்கிறேன். உண்மையை நிலைநிறுத்துவதன் மூலமும், உண்மையின் பின்னால் நிற்பதன் மூலமும், நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும், ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்தையும் இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் (பாஜக) 'வாக்கு சோரியில்' (வாக்குத் திருட்டு) ஈடுபடுகிறார்கள். பீகார் தேர்தலின் போது ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது. 

Advertisment

தேர்தல் ஆணையர் என்ன செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சட்டத்தை மாற்றினார். இந்திய வாக்காளர் பட்டியலில் ஒரு பிரேசிலியப் பெண் எப்படி இருக்க முடியும்?. ஒரு வீட்டில் எப்படி 500 முதல் 600 வாக்காளர்கள் இருக்க முடியும்?. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலைவர்கள் எப்படி ஹரியானாவில் வாக்களிக்க முடியும்?. இது குறித்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை" என்று நாங்கள் குற்றம் சாட்டினோம். நாடாளுமன்றத்தில், கைகள் நடுங்கிக் கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது குறித்து விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை மட்டுமே தைரியமாக இருப்பார்கள்.

modi-ani-mic

ஆனால் இந்தியாவில் உண்மை வெல்லும். இதற்கு சிறிது காலம் எடுக்கலாம். நாங்கள் சத்தியத்தின் பாதையைப் பின்பற்றுகிறோம். அவர்களை (பா.ஜ.க.) அதிகாரத்திலிருந்து அகற்றுவோம். அவர்களின் வாக்குத் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர்களுக்குத் தெரிந்ததால் பிரதமர் மோடியின் நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளது. வாக்குத் திருட்டு இந்திய அரசியலமைப்பின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும்.  அவர்கள் (பா.ஜ.க.) வாக்குத் திருட்டு செய்யவில்லை என்றால், நீங்கள் (மக்கள்) அவர்களை (பா.ஜ.க.) 5 நிமிடங்களில் அதிகாரத்திலிருந்து அகற்றியிருப்பீர்கள்” எனப் பேசினார். 

Advertisment