Rahul Gandhi catches fish while swimming in a pond at Bihar elections
பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்து குளம் ஒன்றில் நீச்சல் அடித்து மீன் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பிரச்சாரக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அருகில் உள்ள உள்ளூர் ஒன்றுக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். அப்போது, ஒரு சிறிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி பிடிக்கப்படும் மீன்பிடி தொழில் நடைபெற்றுக் கொண்டிருந்ததது. இதனை கண்ட ராகுல் காந்தி, அங்குள்ள மீனவர்களோடு அவரும் குளத்தில் குதித்தார். இதையடுத்து சிறிது நேரம் குளத்தில் நீச்சல் அடித்த ராகுல் காந்தி, மீனவர்களோடு சேர்ந்து வலையில் மீன் பிடித்தார். இதில் கூட்டணி கட்சித் தலைவர்களும் ராகுல் காந்தியுடன் சேர்ந்து குளத்தில் இறங்கி நீச்சல் அடித்து மீன்பிடித்தார்கள்.
  
 Follow Us