தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வழங்கப்பட்ட 2,538 பணி நியமனத்தில் ஒரு வேலைக்கு 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு அமலாக்கத் துறை சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, சென்னையில், அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பிரம்மாண்ட பேனர் ஒன்று அதிமுக ஐ.டி. தொழில்நுட்ப பிரிவு சார்பில் வைக்கப்பட்டது.அந்த பேனரில், 2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் என்றால் டோட்டல் எவ்வளவு என்று ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/03/112-2025-11-03-18-29-31.jpg)
இதையடுத்து வேகவேகமாக வந்த காவல் துறையினர் ஆட்களை வைத்து இந்த பேனரை கிழிக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். தகவல் அறிந்து அங்குவந்த அதிமுக ஐ.டி. விங் செயலாளர் ராஜ் சத்யன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘என்ன காரணத்துக்காக கிழிக்கச் சொல்கிறீர்கள்… இந்த பேனரை எடுக்க மாட்டோம். தேவை என்றால் வழக்கு போடுங்கள். முடிந்தால் இந்த கணக்குக்கு பதில் சொல்லுங்கள்’ என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கேயே கூடியதால் சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/03/ad-2025-11-03-18-28-59.jpg)