பல்வேறு இடங்களில் சட்டவிரோத மது விற்பனை என்பது அதிகரித்து வரும் சூழலில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மதுரையில் ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே உள்ள மினி பாரில் அதிகாலை முதலே ஜரூராக நடைபெறும் சட்டவிரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள இரும்பாடி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்ப்பட்டு வருகிறது. அந்த கடைக்கு அருகிலேயே ஒரு மினி பார் ஒன்று உள்ளது. அதில் அதிகாலை முதல்வே சட்டவிரோதமாக மது விற்பதாக அந்தப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் சிறிய துளை வழியாக இணையப் பணப் பரிவர்த்தனைக்கான கியூஆர் கோட் வெளியே நீட்டப்பட்ட நிலையில் அதை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி காலை நேரத்திலேயே பலர் மது வாங்கி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisment