இலங்கையின் பொருளாதாரம் அண்மை காலமாக கீழ்மட்ட நிலையில் இருப்பதால் உணவு, மருந்து, புகையிலை வஸ்துகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவைகள் அண்டையில் உள்ள தூத்துக்குடி கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படுவது தொடர் சம்பவம் ஆகியிருக்கிறது. இந்த கடத்தல் நெட்வொர்க்கில் மாஃபியாக்கள் மற்றும் ஏஜெண்டுகள் உள்ளிட்டோர் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கடத்தலை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், தூத்துக்குடி நகர் பகுதி தெற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட லயன்ஸ் டவுனில் இருந்து ஊரணி ஒத்த வீடு செல்லும் சாலையில் உள்ள உப்பளத்து ஓடைபாலத்தில் (மச்சாது பாலம்)  இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மேற்படி இன்ஸ்பெக்டர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ் ராமச்சந்திரன் தலைமை காவலர்கள் பாலகிருஷ்ணன்.

இருதயராஜ் குமார் இசக்கி முத்து மற்றும் காவலர்கள் பழனி பாலமுருகன் காபிரியேல் பேச்சி ராஜா ஆகியோர் ரோந்து பணியில் இருந்தபோது 19.08.2025 ம் தேதி  04.00மணிக்கு TN 72 Y 4501 என்ற பதிவு எண் கொண்ட. TATA 407 கண்டெயினர் வண்டியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 43 மூட்டை பீடி இலை, கட்டிங் பீடி இலை, பீடி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது . சுமார்(1500கிலோ) கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பைபர் படகுகளும் ( Yamaha 9*9 Hp Engine ) கைப்பற்ற பட்டது. மேலும் வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த அருண்குமார் (34) மற்றும் காயல்பட்டினத்தின் இர்ஷாத் கான் ஆகியோர் பிடிபட்டுள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் பைபர் படகுகள் மற்றும் எதிரிகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப் பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 50 இலட்சம் ஆகும்.