இலங்கைக்கு கடத்த முயன்ற 80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Advertisment

இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி ராஜா ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர்.

Advertisment

அதன்படி, புல்லா வெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் கடந்த 2ஆம் தேதி காலை 5 மணிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக. TN-78-MA-2523 என்ற பதிவு எண் கொண்ட அசோக் லேலண்ட் படா தோஸ்த் லோடு வண்டியும், TN-92-M-4728 என்ற பதிவு எண் கொண்ட. அசோக் லேலண்ட் படா தோஸ்த் லோடு வண்டி கொண்டிருந்தது. அதனை மறித்த போலீசார், வாகனங்களை பரிசோதனை செய்தனர். அதில் முதல் வண்டியில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டை  பீடி இலைகளும், இரண்டாவது வண்டியில்  சுமார் 30 கிலோ எடை கொண்ட 41 மூட்டை பீடி இலைகளும் (மொத்தம் 83 மூட்டை பீடி இலைகள்) இருந்தது.

மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை அதிரடியாகக் கைப்பற்றிய போலீசார், அந்த வாகனங்களின் ஓட்டுனர்களான மதியழகன் மற்றும் விஷ்பண் ராஜ் பெபின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

Advertisment