Putin to follow Ukrainian President to visit India
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 4ஆம் தேதி 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தார். 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த புதின், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா மன்றக் கூட்டத்தில் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் புவிசார் அரசியல் ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று கூறப்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வந்தார் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவுடன் இந்தியா நட்பு பாராட்டி வருவது உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் இந்தியா வரவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு உக்ரைன் அதிபர் செலன்ஸிகிக்கு அழைப்பு விடுத்திருந்தார். உக்ரைனும் ரஷ்யாவும் போர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இருநாட்டு அதிபர்கள் அடுத்த வர இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Follow Us