கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் தன்னுடைய மகள் இறந்ததற்கு தவெக விஜய் கொடுத்த பணத்தை தன்னுடைய பேத்தியின் பெயருக்கு போடாமல் மிரட்டுவதாக பெண் ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் பேசுகையில், 'சுதா என்ற இந்த அம்மாவுக்கு நான்கு பெண்கள். அதில் நான்காவது பெண் விஜய் கூட்டத்திற்கு போய் நெரிசலில் சிக்கி இறந்துள்ளார். அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது. இரண்டு வருடம் தான் அந்த பையன் பொண்ணோட வாழ்ந்தான். இரண்டரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

Advertisment

அந்த பொண்ணும் குழந்தையும் அவங்க அம்மா வீட்டில் தான் இருந்தாங்க.விஜய் கூட்டத்திற்கு போய் இறந்துட்டாங்கனு சொல்லியும் அவன் வரல. ஆனா இறந்த பின்னாடி விஜய் பணம் அறிவித்த உடனே ஹாஸ்பிட்டலுக்கு வந்து உடலைக் கேட்டு பிரச்சனை செய்தான். பெண்ணை இழந்த துக்கத்தில் இந்த அம்மாவால் எதுவும் பேச முடியல. மன உளைச்சலில் இருந்ததால் இவருக்கு பேசவும் தெரியல. அதனால் பெண்ணின் உடலையும், குழந்தையையும் பிடிங்கிட்டு போய்ட்டான். நான் தான் கணவர்னு சொல்லி உடலை எரிச்சிட்டான். என்னமோ பண்ணிக்க என் புள்ள செத்ததற்காக  விஜய் கொடுத்த பணத்தை பேத்தி பேர்ல பேங்கில் போடுனு கோரிக்கை வைத்தோம். பெண்ணின் உடலைப் பெற்று எரிக்கின்ற வரைக்கும் எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லாம பணமெல்லாம் வாங்கியதற்கு அப்புறம் பணத்தை போட முடியாது என்னோட இஷ்டம் என சொல்கிறான். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். எஸ்.பி ஆபிசில் விசாரிக்க சொன்னாங்க. விசாரணைக்கு போனா வைக்கீலோட வந்த அந்த பையன் பணத்தை போட முடியாது என் இஷ்டம் என ரொம்ப அகராதியா, தரைகுறைவா பேசுறான். திரும்ப மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்'' என்றனர்.