Advertisment

“சொன்னதை ஓபிஎஸ் மறைக்கிறார்” -  புகழேந்தி பேட்டி

puga

Pugazhendi said OPS is hiding what he said

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் கஜேந்திரன் சூரியமூர்த்தி பிரின்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய புகழேந்தி, “அதிமுக எந்த காலத்திலும் பா.ஜ.க கூட்டணியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் எதிர்த்து நிற்போம். ஓபிஎஸ், புது கட்சி தொடங்க மாட்டேன் யார் சொன்னது நான் சொல்லவில்லை என்று உங்கள் முன்னால் கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது. வைத்தியலிங்கத்தை அருகில் வைத்துக் கொண்டு சொன்னது. சொன்னதை அப்படியே மறைக்கிறார் ஓபிஎஸ். அதேபோல மூத்த தலைவர் பண்ருட்டியார் தேசிய ஜனநாயக கூட்டணியோடு, இனி  கூட்டணி இல்லை என்று கூறினார். வைத்தியலிங்கம் மிகத் தெளிவாக ஒரு மாதம் பொறுமையாக இருப்போம் பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால் தனி கட்சி ஆரம்பிப்போம் என்று சொன்னாரா இல்லையா?. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும் என்றெல்லாம் சொன்னார்.

Advertisment

ஆனால் இப்பொழுது போய் அமித் ஷாவை, நேரில் சந்தித்து வந்ததாக ஓபிஎஸ் சொல்கிறார். எல்லாமே முன்னுக்கு பின் முரணாக நடக்கிறது. சொந்தக் கட்சி விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று கூறிய உள்துறை அமைச்சர், கே.ஏ.செங்கோட்டையனை அழைத்து பேசுகிறார், ஓபிஎஸ்ஸை அழைத்து பேசுகிறார். எப்படியும் பழனிசாமி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவிற்கு தெரியும். ஆகவே இப்பொழுது ஓபிஎஸ்ஸை, தயார் நிலையில் வைத்துக் கொள்ளத்தான அழைத்து சந்தித்திருக்கிறார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிகிறது. மேலும் மதச்சார்பற்ற கட்சிகள் உதவியோடு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை நிலை நிறுத்தும் வகையில் ஆட்சி அமைக்க பாடுபடுவோம். பிஜேபியுடன் கூட்டணியை அதிமுக தொண்டர்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்

admk Pugazhendhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe