Advertisment

தனியார் பாரில் நடந்த கொடூரக் கொலை; நண்பன் வெறிச்செயல்!

pdu-ravichandran

புதுக்கோட்டை டவுன் எஸ்.எஸ்.நகர் குழந்தைசாமி மகன் நித்யராஜ் (வயது 40). இவர் நேற்று (22.09.2025) மாலை டிவிஎஸ் கார்னர் அருகில் உள்ள எஃப் எல் டூ தனியார் மதுபான பாரில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது நண்பன் சின்னப்பா நகர் 5ஆம் வீதியைச் சேர்ந்த பிச்சை மகன் சரவணன் (வயது 47) (பார்மசிஸ்ட்) நித்தியராஜைப் பார்த்ததும் தன்னிடம் வாங்கிய ரூ.22000 பணம் பற்றி கேட்டுள்ளார்.

Advertisment

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சரவணன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நண்பன் நித்தியராஜை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நித்தியராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும்  நித்தியராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற நகர போலீசார் சரவணனை கைது செய்துள்ளனர். குடி போதை நண்பனையே கொல்ல வைத்துவிட்டது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

friends police incident pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe