Pudukkottai District Administration on alert on rain Emergency helpline numbers announced
வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில், நாளை (28-11-25) புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், மழை பாதிப்பு ஏற்படும் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு 433 பேரிட் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் 9 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மேலும் ஜெனரேட்டர்கள், மின்கம்பங்கள், சவுக்கு கட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் என மீட்புப்பணிக்கான உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அவசர தேவைக்கு அழைக்க கட்டணமில்லா அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண் 04322 222207 என்ற எண்களும் 70923 00029 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தெரிவிக்கலாம் எஎன்று மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow Us