புதுச்சேரி அரசியல், புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்தே தொடங்குவது வழக்கமாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் புதுச்சேரி அரசியல்வாதிகள் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனை தேடி வரத் தொடங்கியுள்ளனர்.

Advertisment

கடந்த தேர்தல் காலங்களில் ரெங்கசாமி, நாராயணசாமி என அடுத்தடுத்து வந்து ஆசி பெற்றுச் சென்றனர். பதவியும் கிடைத்ததால் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக உள்ளது. ஜட்சு சுவாமிகள் அறக்கட்டளையில் உள்ள புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனை வழிபட்டால் ஆட்சிக்கு வரலாம் என்ற நம்பபிக்கையில் புதுச்சேரி அரசியல்வாதிகள் வந்து செல்வதை அறிந்த புதுச்சேரிக்காரரான தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வர நடை சாத்தப்பட்டதால் அம்மன் தரிசனம் கிடைக்காமல் திரும்பிச் சென்றார்.

Advertisment

இந்த நிலையில் தான், இன்று புதுச்சேரி மாஜி முதல்வர் நாராயணசாமி புதுக்கோட்டை வந்து புவனேஸ்வரி அம்மனை வழிபட்டுச் சென்றுள்ளார். அடுத்த சில வாரங்களில் முதல்வர் ரெங்கசாமி வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரெங்கசாமி வந்து கோயிலைச் சுற்றிச் சென்ற பிறகு மீண்டும் வரும் நாராயணசாமி, ரெங்கசாமி சுற்றியதைவிட 2 மடங்கு கூடுதலாக சுற்றிச் செல்வார் என்கிறார்கள். அதே போல தவெக என்.ஆனந்தும் மறுபடியும் வருவார் என்கிறார்கள்.