Advertisment

பார்க்கும் இடமெல்லாம் விரிசல்; கழிவறை சேதம், குடிநீர் இல்லை - ஆட்சியர் அலுவலகத்தில் அவலம்!

Untitled-1

திருப்பத்தூர் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ரூ.109.71 கோடி மதிப்பில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தன. ஏழு அடுக்குகளாக புதிதாக கட்டப்பட்ட இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் இடம்பெறும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தக் கட்டிடத்தில் 200 பேர் அமரக்கூடிய பெரிய கூட்டரங்கம், 300 இருக்கைகள் கொண்ட குறைதீர்ப்பு கூட்ட அரங்கம், மூன்று சிறிய கூட்டரங்கங்கள், கழிவறைகள், செயற்கை நீரூற்றுடன் கூடிய பூங்கா, கட்டிடத்தைச் சுற்றிய சாலை வசதி, நடைபாதை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், மழைநீர் வடிகால் அமைப்பு, அலங்கார மின்விளக்குகள், குடிநீர் வசதி, முகப்பு அலங்கார வளைவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வரும்போது தங்குவதற்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக கேண்டீன் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

எனினும், இவ்வளவு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்ட இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தில், முதல் தளம் முதல் கடைசி தளம் வரை விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, முதல் தளத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறையின் கதவு உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் கழிவறையைப் பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கழிவறைகளில் உள்ள பல பொருட்கள் சேதமடைந்து, சில இடங்களில் கற்களை வைத்து மூடப்பட்டுள்ளன.

ஐந்தாம் தளத்தில் உள்ள கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முதல் தளம் முதல் ஏழாம் தளம் வரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சிறிய நீர்த்தேக்கத் தொட்டி பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், குடிநீர் விநியோகம் தடைப்பட்டு, அனைத்து தளங்களில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

2022-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்கு ஆண்டுகளில் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, கழிவறை வசதிகளில் தேவையான பொருட்கள் சேதமடைந்து கிடப்பதால், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. இந்தக் குறைபாடுகளால், அலுவலகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

collector office people
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe