Advertisment

பொது மக்கள் மனுக்கள் மீது அலட்சியம்; தாசில்தாரைக் கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

3

பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிற கோவில்பட்டி நகர தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் கொடுக்கிற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது மட்டுமின்றி, மக்களை அலைக்கழிக்க வைக்கும் கோவில்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணியனை கண்டித்தும், தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிற வகையில் செயல்பட்டு வரும் தாசில்தார் பாலசுப்பிரமணியனை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தாசில்தாரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பாகியிருக்கிறது.

Advertisment

Kovilpatti Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe