தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் பொதுக்கூட்டம் மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி  நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக பாஜகவின் மாநில நிர்வாகிகள் நாளை (13.01.2025) ஆலோசனை மேற்கொண்டு பொதுக் கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான அனுமதியை காவல்துறை தரப்பில் இருந்து பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

அதே சமயம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  நாளை டெல்லி செல்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரக்கூடிய சூழலில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில்  முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதாவது மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லியில் உள்ள இல்லத்தில் நாளை மறுநாள் (14ஆம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த பொங்கல் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜவின் முன்னாள் மாநில தலைவர் ஆகியோர் நாளை மாலை சென்னையிலிருந்து டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.