Public meeting postponed - Vijay consults for the third day Photograph: (tvk)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தரப்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று விஜய் தரப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதேபோல் அரசு தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உள்ள விஜய் மூன்றாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் இரண்டு வாரங்களுக்கு விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக புதிய அடுத்தகட்ட அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.