சித்தரிக்கப்பட்ட படம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பஞ்சாயத்தில் திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி தாமோதரன் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் பயணியர் நிழற்கூடம் குடி தண்ணீர் சாலை வசதி தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர் வட்டார வளர்ச்சி அலுவலர் என உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது
இந்த நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் கிராம சபா கூட்டத்திற்கும் ஊராட்சி மன்ற தலைவர் வராததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராம சபா கூட்டத்தைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Follow Us