Protest in front of Ripon House again - sanitation workers arrested Photograph: (police)
பணி நிரந்தரம் வேண்டும், தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாசலில் தூய்மைப் பணியாளர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு நடத்தப்பட்டதை போன்று மீண்டும் ரிப்பன் மாளிகை வளாகப் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னையின் புறநகரில் உள்ள சமுதாய நலக்கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநகர பேருந்துகள் மூலமாக அவர்கள் சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Follow Us