Advertisment

'மாற்று இடம் வேண்டும்...' -சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

a4855

Protest at the Sub-Collector's Office demanding a change of location Photograph: (cuddalore)

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட தில்லையம்மன் ஓடை, கோவிந்தசாமி தெரு, நாகச்சேரி குளம் ஓமக்குளம், அண்ணாக்குளம், ஞானபிரகாச குளக்கரை, அம்பேத்கர் நகர், நேரு நகர், பாலமான் இறக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர், பொதுப்பணி துறையினர் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் இடித்து தரைமட்டமாக மாற்றியுள்ளனர்.

Advertisment

அந்த இடங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். வீடுகளை இழந்த ஏழை மக்களுக்கு மாற்று இடம் கேட்டுப் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. போர்க்கால அடிப்படையில் இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்று இடம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

a4856
Protest at the Sub-Collector's Office demanding a change of location Photograph: (cuddalore)

 

இந்த போராட்டத்திற்கு சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.  மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா,ராமச்சந்திரன் நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கலந்து கொண்டு வீடுகளை இழந்தவர்களின் நிலைமை குறித்தும் இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடியதை சுட்டிக்காட்டி உடனடியாக மாற்று இடத்துடன் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேசினார்கள்.

Advertisment

அரசு சரியான நடவடிக்கை இல்லையென்றால் தொடர்ந்த சாராட்சியர் அலுவலக வளாகத்தில் சமைத்து சாப்பிட்டு இங்கேயே இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்காக பொதுமக்கள் பாய் சமைப்பதற்கான பாத்திரம், விறகு உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்துள்ளனர். இதனால் சாராட்சியர் அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Cuddalore protest
இதையும் படியுங்கள்
Subscribe