மதுரையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisment

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்திருந்த நிலையில் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக மாணவர்கள் முழக்கமிட்ட நிலையில் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். தொடர்ந்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்ப மாணவர்கள் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கு முன்பாக மாணவர்களுக்கும் காலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment