Advertisment

ஐ.பெரியசாமி வீட்டில் நடந்த ரெய்டு - 'பறிமுதல்' குறித்து அமலாக்கத்துறை அறிவிப்பு

a4892

Property documents seized from I. Periyasamy's house - Enforcement Directorate announcemen Photograph: (ed)

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் கடந்த 16.08.2025 அன்று காலை முதல் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

Advertisment

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் முகாம் அலுவலகமான ரோஜா இல்லம், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லம், ஆரம் காலனி பகுதியில் அமைந்துள்ள சிவாஜி நகர் என்ற பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வரும் இல்லம், ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமாரின் இல்லம்  உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

a4916
Property documents seized from I. Periyasamy's house - Enforcement Directorate announcement Photograph: (ed)

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். மேலும் அங்கிருந்த சரவணன் என்ற ஆதரவாளர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலையில் இருந்து தொடர்ந்து 11 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை அன்றைய தினம் மாலை நிறைவு பெற்றது.

இந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து  அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. 
i periyasamy Dindigul district dmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe