தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் கடந்த 16.08.2025 அன்று காலை முதல் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் முகாம் அலுவலகமான ரோஜா இல்லம், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லம், ஆரம் காலனி பகுதியில் அமைந்துள்ள சிவாஜி நகர் என்ற பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வரும் இல்லம், ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமாரின் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/18/a4916-2025-08-18-17-25-21.jpg)
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். மேலும் அங்கிருந்த சரவணன் என்ற ஆதரவாளர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலையில் இருந்து தொடர்ந்து 11 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை அன்றைய தினம் மாலை நிறைவு பெற்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/18/a4892-2025-08-18-17-21-40.jpg)