அண்ணாமலை பல்கலைக்கழகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் அதிக அளவு பணி நியமனங்கள் உள்ளதாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பணி நிறைவு செய்துள்ளனர். இதன் மூலம் 700-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் 4 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ஊழியர்கள் பணி நிறவல்களுக்கு சென்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் ஊழியர் மற்றும் பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணி உயர்வு, 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்போது ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில்  தேர்வைப் புறக்கணித்து பல்கலைக்கழக நிர்வாக அலுவலக வாயிலில் அமர்ந்து 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இரவு பகல் என பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் தேர்வு மற்றும் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்து. பல்கலைக்கழகத்தின் நிலவும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.