தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித் குமார், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர்களின் ஊதியத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (09-11-25) சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிப்பது, நேரடி ஓடிடி தளங்களில் நடித்து படப்படிப்புக்கு ஒத்துழைப்பு தராத நடிகர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்போவதில்லை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது நடிகர்கள், தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பல்வேறு ஓடிடி நிறுவனங்களில் வெளியாகும் வெப் சீரியஸ் தொடரிலும் நடிக்கிறார்கள். படப்படிப்புக்கு கொடுத்த கால்சீட்டை, இணைய தொடர்களுக்கு கொடுப்பதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக இனி ஓடிடியில் நடிக்கும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கவதில்லை என்ற தீர்மானத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் நிறைவேற்றிருக்கிறார்கள்.
அதே போல், முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் விதமாக ஊதியத்திற்கு பதிலாக படம் வியாபாரமாகும் போது லாபத்தின் அடிப்படையில் பங்கு வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என்ற இணையதள புக்கிங்கை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/09/rajiniajith-2025-11-09-18-37-39.jpg)